Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

Poonththalir-kollywood

Poonththalir-kollywood

.


நான் ஏன் போகணும்…! ” நான் போக மாட்டேன்”… பிரசன்னா அதிரடி முடிவு!

Posted on May 2 2020, 07:20am

நான் ஏன் போகணும்…! ” நான் போக மாட்டேன்”… பிரசன்னா அதிரடி முடிவு!

யாருடைய விமர்சனங்களுக்கும் அஞ்சவில்லை, சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருந்து நான் விலக மாட்டேன் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

மலையாள பிரபல நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து, இயக்கியுள்ள படம் வரனே அவஷ்யமுண்டு, இப்படத்தை இயக்குனர் அனூப் சத்யன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய் ஒன்றிற்கு பிரபாகரன் என்ற பெயர் சூட்டி இருப்பார்கள். இந்த கட்சி தமிழ் மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. இதனால் இந்த விமர்சனங்களுக்கு நடிகர் துல்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர்.

அதனால் துல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டு, அதில் அவரது பக்கம் இருக்கும் நியாங்களையும் எடுத்துரைத்து, அதற்கு மன்னிப்பும் கேட்டார். அந்த கடிதத்தில், அவர், இதற்காக யாரும் என் தந்தையும், குடும்பத்தையும் திட்டிருக்க வேண்டாம் என்று வேதனையை வெளிப்படுத்திருந்தார். இந்நிலையில் நடிகர் பிரசன்னா துல்கருக்கு ஆறுதல் கூறி, மேலும் மன்னிப்பு கேட்டிருந்தார்.

நடிகர் பிரசன்னாவின் வெளியிட்ட கருத்தால் பலரும் அவரை கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கினர். ஆனால் பிரசன்னா இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் அமைதி காத்தார். அவர் அமைதியாக இருப்பது வைத்து பலரும் பிரசன்னா டுவிட்டரிலிருந்து விலக போகிறார் என்று கூறி வந்தார்கள்.

இதைப்பற்றி பிரசன்னா கூறியதாவது; “யாரோ ஒரு சிலர் நடந்துகொள்ளும் விஷயத்துக்காக நான் ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன். பலமுறை எனக்கு எவ்வளவோ அன்பும், ஆதரவும் ட்விட்டரில் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் மே மாதம் 21 ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீ பெரும்புதூரில்  புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட முதல் குற்றவாளி பிரபாகரன்.

To be informed of the latest articles, subscribe:

Comment on this post

We are social!

Recent posts