Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

Poonththalir-kollywood

Poonththalir-kollywood

.


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணக்கிறாரா தமன்னா? ஜோடியாக இருக்கும் படம் வெளியானதால் பரபரப்பு!

Posted on May 4 2020, 13:57pm

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணக்கிறாரா தமன்னா? ஜோடியாக இருக்கும் படம் வெளியானதால் பரபரப்பு!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணக்கிறாரா தமன்னா? ஜோடியாக இருக்கும் படம் வெளியானதால் பரபரப்பு!

தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் தமன்னா. சமீபகாலமாக அவர் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதே இதற்குக் காரணம், குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர் எனக் கூறப்பட்டது. அதற்குப் பதில் அளித்த தமன்னா, இப்போதைக்கு தனக்குத் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை மணக்க உள்ளதாக புதிய கிசுகிசு பரவி வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கடுப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அப்துல் ரசாக் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக மெசேஜ் பகிர்ந்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் உடன் தமன்னா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் ரசாக் கைகளில் தங்க செயின்கள் வைத்திருக்கிறார். அருகில் தமன்னா சிரித்தபடி நிற்கிறார். ஆனால் இந்த புகைப்படம் மிகவும் பழையது. துபாயில் நடந்த நகை கடைதிறப்பு விழாவில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டபோது எடுத்த படம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே திருமண கிசுகிசுக்களுக்கு பதில் அளித்துக் களைத்துப்போன தமன்னா தற்போது கொரோனா ஊரடங்கில் தனது வீட்டில் சமையல் செய்துக்கொண்டும், உடற்பயிற்சி, யோகா செய்துகொண்டும் எந்த கிசுகிசுவை யும் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்து வருகிறார்.

To be informed of the latest articles, subscribe:

Comment on this post

We are social!

Recent posts