Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

poonththalir-kollywood

poonththalir-kollywood

.


நயன்தாரா, விக்னேஷ் சிவனின் வீடியோவை வெளியிட்ட ரசிகர்!

Posted on April 28 2020, 21:39pm

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் வீடியோவை வெளியிட்ட ரசிகர்!

நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகள் அடிக்கடி தங்களது ஜோடி படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கில் இருவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் நயன்தாராவுக்கு விக்னேஷ்சிவன் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்க வேண்டிய காட்சி பற்றி விளக்கும் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். காட்சிப்படி விஜய் சேதுபதி காதுகேட்காத மாற்றுத்திறனாளியான நயன்தாராவிடம் தனது காதலைச் சொல்ல அதை நயன்தாரா கேட்காமல் வேறு ஏதோ பதில் சொல்வதுபோன்று காமெடியாக அக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

விக்னேஷ்சிவன் காட்சியை விளக்கும் போதே நயன்தாரா சிரித்து ரசித்து காட்சியை உள்வாங்கும் இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.இந்த படத்தின்போதுதான் விக்னேஷ்சிவன் , நயன்தாராவின் காதலும் மிகவும் நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

To be informed of the latest articles, subscribe:
Comment on this post

Blog archives

We are social!

Recent posts